அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என்கிற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இளைஞர்கள் இந்திய கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.