உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற தேர்பவனியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாண வேடிக்கை முழங்க, மின் விளக்குகளால் அலக்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆரோக்யமாதா, புனித மைக்கேல், சம்மனசு, புனித சூசையப்பர்,புனித அந்தோனியார், புனித செபஸ்தியர் உள்ளிட்ட சொரூபங்கள் பவனி வந்தன. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் அளவிற்கு மரியே வாழ்க, மரியே வாழ்க என முழக்கமிட்டும், தேரின் மீது பூக்களை தூவியும் மனமுருகி வழிப்பட்டனர்.