சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சக ஊழியர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே வெங்கடாசலம் உயிரிழந்தார்.