சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். லிப்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடிகளுக்கும் லிப்ட் சென்றதால் புகை மூட்டமாக காட்சியளிக்க, உடனடியாக பொதுமக்களும், ஊழியர்களும் மாலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து மாலில் பரவிய புகையை நான்கு நுழைவாயில் வழியாகவும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.