புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விபத்துக்கு காரணமான நபரை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்தவரின் சடலத்தோடு காவல் நிலையம் முன்பு உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. நெம்மேலிவயல் பகுதியை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி துரைராஜ், கடந்த 16-ஆம் தேதி கட்டுமாவடியில் இருந்து நெம்மேலிவயலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கிழக்கு கடற்கரை சாலை கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியில் எதிரே அதிவேகத்தில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த துரைராஜ், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : வேம்படி சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா கோலாகலம் காலை முதல் சிறப்பு பூஜைகள், மதியம் சிறப்பு கொடைவிழா..!