திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், கழிப்பறைகளின் கதவுகள் சேதமடைந்தும் கிடக்கிறது. இங்கு மருந்தாளுநர் பணியிடம் நிரப்பப்படாமல் செவிலியர்களே நோயாளிகளுக்கு மாத்திரை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.