அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை மீண்டும் இணைய சாத்தியம் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிப்பட கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, அதிமுகவிற்கு இபிஎஸ் மூடுவிழா நடத்தி விடுவார் எனவும் விமர்சித்தார்.