கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, இறந்தவரின் சடலத்தை வயல் வழியாக இடுகாட்டுக்கு எடுத்து சென்றபோது, நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை தரையில் வைத்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டிகை கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாத பட்டியலின மக்கள், விளை நிலம் வழியாக சடலம் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.