@page { size: 21cm 29.7cm; margin: 2cm } p { margin-bottom: 0.25cm; line-height: 115%; background: transparent } a:link { color: #000080; so-language: zxx; text-decoration: underline } a:visited { color: #800000; so-language: zxx; text-decoration: underline } புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், புதிய மதுபான தொழிற்சாலை அமைப்பதை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரெஸ்டோபார்களால் அரசுக்கு எந்த வருவாயும் கிடையாது. மக்கள் தொகை அடிப்படையில் ரெஸ்டோபார்களை வழங்கியுள்ளோம் என கூறிய முதல் அமைச்சர்,அதன்மூலம் கிடைத்த வருவாய் என்ன? என தெரியப்படுத்த வேண்டும். ரெஸ்டோபார்களில் போலியான மதுபானங்களை விற்கின்றனர். கிஸ்தி கட்டிய மதுபானங்கள் அங்கு விற்கப்படுவதில்லை. இதை கண்காணிக்கும் அமைப்பு புதுவை அரசிடம் இல்லை. அதையும் தாண்டி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றாலும், ரெஸ்டோபார்கள் அனுமதிப்பதில்லை. புதுவையில் தற்போது இயங்கி வரும் மது ஆலைகளையும், மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால், வருவாய் கிடைக்கும். இதன் மூலம் நிதி நெருக்கடியும் தீரும். ஏற்க்கனவே தற்போது புதுவையில் இயங்கும் 5 மதுஆலைகளில் 500 பேர் கூட வேலையில் இல்லை. புதிய மதுஆலைகளால் 5 ஆயிரம் பேருக்கு எப்படி வேலை கிடைக்கும்.? என கேள்வி எழுப்பினார். மதுபார்களை அரசு ஏற்பதாக இருந்தால் காங்கிரஸ் ஆதரிக்கும். இதை தேர்தல் அறிக்கையில்கூட தெரிவிப்போம். மது ஆலை, ரெஸ்டோபார்களுக்கு அனுமதி அளிக்கும் முதல அமைச்சர் காமராஜர் சட்டை அணிவதை முதல் அமைச்சர் ரங்கசாமி நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக மது வகைகளின் நிறுவனம் அளிக்கும் பிராண்டுகளின் சட்டையை அணிய வேண்டும் என வைத்திலிங்கம் கூறினார். புதுச்சேரி சட்டசபையில் மது ஆலை அனுமதிக்கு எதிர்கட்சியான திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? என நிருபர்கள் கேட்டபோது, காங்கிரசுக்கு 2 உறுப்பினர்கள்தான் இருப்பதால் எதிர்ப்பு குரல் வெளியே கேட்கவில்லை. மது ஆலையை காங்கிரஸ் எதிர்க்கிறது. இந்தியா கூட்டணியில் திமுக இருந்தாலும் அது, அவர்களின் நிலைப்பாடாக இருக்கலாம். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். இண்டியா கூட்டணிக்கு புதுச்சேரியில் வேலை இல்லை...புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இல்லை...தனித்தனியாக செயல்படுகிறோம்...தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி பேசுவோம் என வைத்திலிங்கம் கூறினார்.