தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி இல்லை என அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுக தலைமையில் தான் ஆட்சி என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் இல்லை, இனிமேலும் இல்லை எனவும் அவர் கூறினார்.