சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவிவருவதாக பொதுமக்கள், நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் கழிவறைகள் சுகாதாரமற்று இருக்கும் நிலையில், பொதுமக்கள் காத்திருப்பு அறை முதல் அறுவை சிகிச்சை பிரிவு உள்ள பகுதி வரை தெரு நாய்கள் படுத்து உறங்கியும், உலவியும் வருவதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.