திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காலை நேரத்திலும் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்: தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு... மாயனூர் கதவணை 1வது ஷட்டர் பகுதியில் மிதந்த சடலம்