சென்னை கோயம்பேடு காய்கனி மார்க்கெட்டில் ஆயுதபூஜையை ஒட்டி விற்பனைக்காக வைக்கப்பட்ட பூசணி விற்பனையாகாமல் டன் கணக்கில் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். மார்க்கெட் வளாகத்தை விட்டு சந்தை வெளியே அமைத்து உள்ளதாலும், ஒரே இடத்தில் அனைத்து வியாபாரிகளையும் அடைத்துள்ளதாலும் வியாபாரம் பாதித்து பூசணிக்காய்களை வீசிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.