வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் போதுமான எண்ணிக்கையில் அரசு பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள், பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்ப மாணவர்கள், பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே வருவதால் பள்ளி மாணவர்கள் முட்டி மோதி ஓடிச் சென்று பேருந்தில் ஏறும் நிலையில் விபத்து ஏற்டும் அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.