நீலகிரி மாவட்டத்தில் எந்தவொரு அரசு பள்ளிகளையும் மூடும் திட்டம் இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 80 அரசு பள்ளிகளை மார்ச் மாதத்திற்குள் மூடும் திட்டத்தில் மாவட்ட நிர்வாகம் இறங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்து, மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.