தேனி முல்லைப் பெரியாறு அணையில் விநாடிக்கு 1,622 கன அடி நீர் திறக்கப்படுவதால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதையடுத்து, பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.