தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், சீனப் பெண்ணை தமிழக பாரம்பரிய முறைப்படி சொந்த ஊரில் கரம்பிடித்துள்ளார். அமெரிக்காவில் ஐ.டி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும்அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த தருண்ராஜ் என்பவர் தன்னுடன் பணியாற்றும் சீனாவைச் சேர்ந்த ஸ்னோ ஜூ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் சொந்த ஊரில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்து, சொந்த ஊரான அம்மச்சியாபுரத்தில் உறவினர்கள் முன்னிலையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.