தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த மாவட்ட ஆட்சியர், ஒப்பந்ததார்கள் மற்றும் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார். புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய சுமார் 33 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தமிட்டு பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தேனியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஒராண்டு ஆகியும் நிறைவு பெறாத கட்டுமானப் பணியைக் கண்டு ஆத்திரமடைந்தார்.இதையும் படியுங்கள் : கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு... எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து