கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளப்பட்டி கருத்தப்பா தெரு பகுதியைச் சேர்ந்த சர்புதீன் மற்றும் செல்லுக்காடு பகுதியைச் சேர்ந்தஅல்தாப் உசேன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.