செங்கல்பட்டில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்த 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரிய செட்டி தெருவில் உள்ள செல்போன் கடை, இரண்டு துணிக்கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், ரூபாய் 60 ஆயிரம் ரொக்கம், செல்போன்கள், செல்போன் உதிரி பாகங்கள், துணிகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.