கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து திப்பசந்திரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திங்கட்கிழமை இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்த பிறகு ஊழியர்கள் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில், காலையில் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை திருப்பி விட்டு, 16 பெட்டி மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.