சென்னை மாதவரம் அருகே, தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடி விட்டு புர்கா அணிந்து தப்பிக்க முயன்ற நபர் போலீசில் சிக்கினார். கடன் தொல்லையால் நள்ளிரவில் புர்கா அணிந்து பெண் போல வேடமிட்டு வந்து பணத்தை திருடிவிட்டு சொந்த ஊருக்கு தப்ப முயன்றதும் தெரியவந்தது.