காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடை சுவரில் துளையிட்டு ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள், ரூபாய் 30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். திருட்டு குறித்த ஆதாரங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் சுவரில் இருந்த துளையை சரிசெய்து டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனையை தொடங்கினர்.