அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மர்ம நபர்கள் இருவர், நள்ளிரவில் கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.ஆதிகுடிகாடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்குள் புகுந்த திருடர்கள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். லுங்கியால் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு ஒருவரும், பனியனால் முகத்தை முழுவதுமாக மறைத்தபடி மற்றொருவரும் வந்து திருடிய நிலையில், அவர்கள் யார் என சிசிடிவி பதிவுகளை கொண்டு செந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.