தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். கோயிலின் சூரிய புஷ்கரணி முன்பு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள, அஸ்திர தேவருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.