திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கடைசி ஞாயிறை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். முன்னதாக வாஞ்சிநாதர்,சுப்பிரமணியர், வள்ளி தேவசேனா,விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாட வீதிகளில் வலம் வந்து நடன வாகன மண்டபத்தில் எழுந்தருள, குப்த கங்கை திருக்குளத்தில் அசுர தேவருக்கு பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.