புதுச்சேரியின் காரைக்கால் அருகே மாசிமகத்தை ஒட்டி விநாயகர், முருகன், சிவன், பெருமாள் உள்ளிட்ட 17 சாமி சிலைகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வரிச்சிக்குடி, மேலக்காசாகுடி, திருவேட்டக்குடி ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த உற்சவர் மூர்த்திகள், மண்டபத்தூர் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், கடலில் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.