திருச்சி திருவெறும்பூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பணியக்குறிச்சியை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ், பரிமளா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுந்தர்ராஜ், பரிமளாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பரிமளா அவரது அண்ணன் கணேசனிடம் கூற, ஆத்திரமடைந்த அவர் மகன் வடிவேல் உள்ளிட்ட நான்கு பேருடன் சென்று சுந்தர்ராஜ் தலையை துண்டித்து கொலை செய்தார். இதில் கணேசன், வடிவேல், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.