ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே காக்க வைத்ததோடு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதுகுளத்தூர் அடுத்த சாம்பகுளம் பகுதியை சேர்ந்த கரண் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் பட்டப்படிப்பு முடித்த நிலையில், வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார். இவருடைய சகோதரரும் மாற்றுத்திறனாளி என்பதால் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 20 முறைக்கு மேல் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.