நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். கரிக்கையூர் பங்களாபாடி பழங்குடியின கிராமத்திலுள்ள குழிக்குள் சுப்பிரமணி என்ற இளைஞர் தவறி விழுந்தார்.