தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இளைஞர்கள் சாலையிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ரெட்டேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் நந்தனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அரும்பாக்கம் பெரியார் பாதை அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி இளைஞர்கள் ஆட்டம் போட்டனர்.