மதுரையில் இளைஞரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மீனாம்பாளபுரம் பகுதியை சேர்ந்த அஜித் என்பவர், பரவையில் உள்ள காங்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், பணி முடிந்து செல்லூர் மேம்பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த அஜித்தை, கும்பல் ஒன்று வழிமறித்து கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஜித் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக அஜித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.