மதுரை மாவட்டத்தில் காணாமல் போன தனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இளைஞர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.மதுரை காளவாசலை சேர்ந்த மாநகராட்சி பணியாளர் கார்த்திகேயன் என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை காண்பதற்காக பைக்கில் சென்றார். அப்போது மருத்துவமனை வெளியே நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றார்.இந்நிலையில் அவர், தாயின் நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகன புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டியதுடன் சன்மானம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.