செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே தனது மகளுடன் கோயிலுக்கு சென்ற பெண் அணிந்திருந்த தாலியை இளைஞர்கள் பறித்து கொண்டு தப்பினர். சென்னை பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் தனது மகளுடன் செல்வ விநாயகர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் தாலி கயிறுடன் அணிந்திருந்த 12 கிராம் தங்கத்தை, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பறித்துக்கொண்டு தப்பித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.