தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தங்களது கிராமத்தை சுற்றிலும் பனை விதை பந்துகளை இளைஞர்கள் விதைத்தது பாராட்டை பெற்றுள்ளது. லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள், தனியார் அமைப்புடன் இணைந்து சுற்றியுள்ள 2 குளங்களின் கரைகளிலும், சாலையோரங்களிலும், ஊரை சுற்றியுள்ள பொது இடங்களிலும் 6,000 பனை விதை பந்துகளை விதைத்தனர். இளைஞர்களுக்கு பக்கபலமாக கிராமத்து மக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.