திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஊருக்குள் தென்பட்ட மலைப்பாம்பை இளைஞர்கள் தைரியமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கே.ஜி. கண்டிகை கிராமத்திற்குள் தென்பட்ட மலைப்பாம்பை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு நீண்ட நேரம் போராடி லாவகமாக மலைப்பாம்பை பிடித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக காப்பு காட்டில் விட்டனர்.