காதலிக்க மறுத்த இளம்பெண்ணை முகத்திலேயே குத்தி தாக்கிய இளைஞரின் கைக்கு போலீசார் மாவு கட்டு போட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் இளம்பெண் அதேபகுதியை சேர்ந்த சித்திக்ராஜா என்பவருடன் நட்பாக பழகிவந்த நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நட்பை முறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் கடையில் பணியில் இருந்த இளம்பெண்ணை சித்திக்ராஜா கடுமையாக தாக்கியதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இதனிடையே விசாரணையின் போது தப்பிக்க முயன்ற சித்திக்ராஜா தவறி விழுந்ததில் கை முறிந்தது.