காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் லிவிங் டுகெதர் உறவில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் சரண்யாவின் கழுத்தில் காயம் இருந்ததால், கூட வசித்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாடகை வீட்டில் காதலன் ஜீவபிரியன் என்பவருடன் உடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த சரண்யா சனிக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார். சரண்யாவின் கழுத்தில் காயங்கள் இருந்ததால், ஜீவபிரியன் மீது, தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.