கன்னியாகுமரி கடலில் உள்ள மரணப் பாறையில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஏறி செல்ஃபி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரின் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் நீந்தி மரணப் பாறைக்கு சென்று செல்ஃபி எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.