காவிரி ஆற்றில் ஈமச்சடங்கில் பங்கேற்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த விஜய் என்பவர், உறவினரின் ஈமச்சடங்கிற்காக எடப்பாடி கிழக்குகரை பகுதி காவிரி ஆற்றுக்கு சென்றார். அப்போது, கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை வரை போட்டி போட்டு நீந்திய போது, நடு ஆற்றில் நீந்த முடியாமல் தண்ணீரில் முழ்கினார்.