திருச்சியில் கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்த இளம்பெண்ணை, காவலர் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஸ்ரீபொன்னையன் என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவன் காதலிப்பதாக கூறி கர்பமாக்கியுள்ளான். இந்நிலையில், கருவை கலைத்தால் தான் நமக்கு திருமணம் நடத்தி வைப்பார்கள் என பெண்ணிடம் நயவஞ்சகமாக பேசி கருவை கலைக்க வைத்துள்ளான். அதன் பின் அவனை தொடர்பு கொண்ட போது எடுக்காததால் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தார். ஆனால் ஸ்ரீரங்கம் போலீசார் புகாரை எடுக்க அலட்சியம் காட்டியதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் அளித்தார்.