விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர், நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கூனிமேடு பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நோக்கி சென்ற போது, முன்னால் சென்ற பேருந்து திடீரென வேகத்தை குறைத்து பிரேக் போட்டதால் அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பிய போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். எதிரே வந்த லாரியில் சிக்கி இருசக்கர வாகனம் உருக்குலைந்த நிலையில், பயாஸ் நூலிழையில் உயிர் தப்பினார்.இதையும் படியுங்கள் : பிரதான குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீர்... குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு