காங்கேயம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி லாரி சக்கரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காங்கேயம் - திருப்பூர் சாலையில் வசித்து வந்த எலெக்ட்ரீசியன் காதர் பாஷா, காங்கேயத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் சாலையில் சென்றார். கரூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.