இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.திருச்சி ஜங்ஷனில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்த இளம் பெண்ணுக்கும், விஸ்வாஷ் நகரை சேர்ந்த ஸ்ரீபொன்னையன் என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீபொன்னையன், அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, கர்ப்பத்தை கலைக்க செய்து தலைமறைவான காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம் பெண் கோரிக்கை விடுத்தார்.