காஞ்சிபுரம் அருகே, மணல் திருட்டை தட்டிக்கேட்ட குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வீட்டின் எதிரே செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாளுடன் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர்.