இந்தியாவிற்கே லீடர் ஆக தமிழ்நாடு திகழ்கிறது என உலக வங்கியின் உறுதுணையை சுட்டிக் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். சென்னை தரமணியில் உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தான் என்ஜினாக உள்ளது என்றார். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிப்பதாக கூறிய அவர், அதன் உதவியுடன் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் நினைவு கூர்ந்தார்.