சாம்சங் தொழிலாளர் சங்கத்தை, தொழிலாளர் நல ஆணையம் அங்கீகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் அருகே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.