கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே தண்ணீரில் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புங்கம்பட்டி கிராமத்தில் சுமார் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிறிய பாலம் கட்ட ஏற்படுத்தப்பட்ட குழியில் இருந்த நீரை அகற்றாமல் அதில் அப்படியே சிமெண்ட் கலவைகளை கொட்டி பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.