விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு அரை அடியில் இருந்து பத்து அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், தலா 150 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.