ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த வினோபா நகர் பகுதியில் கலங்கிய நிலையில் குடிநீர் வருவதாகவும், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பகுதி பெண்கள் கலங்கிய நீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.